விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த சாரம் கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தப் பகுதியில் கடந்த 20 நாள்களுக்கும் மேலாக குடிநீர் வராததால் பலமுறை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
20 நாள்களாக வராத குடிநீர்; தேடி வந்து உதவிய தேமுதிக - குடிநீர் வினியோகம் செய்த தேமுதிகவினர்
விழுப்புரம்: திண்டிவனம் அடுத்த சாரத்தில் 20 நாள்களாக குடிநீர் விநியோகம் செய்யாததால் தேமுதிக சார்பில் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய்பட்டது.
இதனால் பொதுமக்கள் தண்ணீர் இல்லாமல் அத்தியாவசிய தேவைகளுக்கு அவதியடைந்து வந்தனர். இதையடுத்து தேமுதிக விழுப்புரம் மாவட்ட செயலாளரும், உயர் மட்டக் குழு உறுப்பினருமான எல்.வெங்கடேசன் ஆலோசனையின் பேரில், முன்னாள் தேமுதிக கவுன்சிலர் சந்திரலேகா பிரபாகரன் மற்றும் தேமுதிக ஒன்றிய செயலாளர் பிரபாகரன் ஆகியோர் ஏற்பாட்டில் அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு டேங்கர் லாரி மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து அப்பகுதி பொதுமக்கள் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் மாவட்ட செயலாளர் எல்.வெங்கடேசன் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தனர்.