தமிழ்நாடு

tamil nadu

'அதிமுக கொடியைச் சட்டவிரோதமாகப் பயன்படுத்த எந்தக் கொம்பனுக்கும் அதிகாரமில்லை'

By

Published : Feb 1, 2021, 11:40 AM IST

அதிமுக கொடியைச் சட்டவிரோதமாகப் பயன்படுத்த எந்தக் கொம்பனுக்கும் அதிகாரமில்லை என அமைச்சர் சி.வி. சண்முகம் ஆவேசமாகப் பேசியுள்ளார்.

Minister CV Shanmugam
Minister CV Shanmugam

விழுப்புரம்:பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள பூந்தோட்டம் குளம் புனரமைப்புப் பணிகளைச் சட்டத் துறை அமைச்சர் சி.வி. சண்முகம் பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “அதிமுக கொடியைச் சட்டவிரோதமாகப் பயன்படுத்தியது சசிகலாவாக இருந்தாலும், கட்சியை விட்டு நீக்கப்பட்ட யாராக இருந்தாலும் யாருக்கும் உரிமை இல்லை.

அது எங்கள் அதிமுகவின் சொத்து. சட்டவிரோதமாகப் பயன்படுத்த யாருக்கும், எந்தக் கொம்பனுக்கும் அதிகாரமில்லை. அவர்கள் மீது உரிய வழக்குத் தொடுக்கப்படும்.

இரட்டை இலை சின்னத்தின் கொடியைப் பயன்படுத்தி சசிகலா தமிழ்நாட்டு எல்லைக்குள் நுழைந்தால், நிச்சயமாக வழக்குத் தொடர்வது மட்டுமல்லாமல், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ன செய்யும் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்பீர்கள்" என்று ஆவேசமாகப் பேசினார்.

ABOUT THE AUTHOR

...view details