தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'விடுதலை சிறுத்தைகளை யாராலும் அச்சுறுத்த முடியாது' - திருமாவளவன் - ஆட்டோ ஓட்டுனர் சங்கம்

விழுப்புரம்: யாரை வேண்டுமானாலும் தன்னுடைய அச்சுறுத்தல் மூலம் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துவிட முடியும் என நினைக்கும் பாஜகவால் விடுதலை சிறுத்தைகள் கட்சியை அச்சுறுத்த முடியாது என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

no-one-can-threaten-the-viduthalai-chiruthaigal-thirumavalavan
no-one-can-threaten-the-viduthalai-chiruthaigal-thirumavalavan

By

Published : Jan 20, 2021, 7:46 AM IST

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் ஆட்டோ ஓட்டுநர் சங்கம் திறப்பு விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கலந்துகொண்டு, பெயர் பலகையை திறந்து வைத்தார்.

இவ்விழாவில் பேசிய அவர், “ஓபிசி மாணவர்களுக்கு மருத்துவ கல்வியிலும் இட ஒதுக்கீடு இல்லை என்பதை உலகறிய செய்தது விடுதலை சிறுத்தைகள் கட்சிதான். இடஒதுக்கீடு சம்பந்தமாக மத்திய அமைச்சர்களை சந்தித்து மனு கொடுத்தோம். 7.5 விழுக்காடு ஒதுக்கீடு தீர்மானம் நிறைவேற்றி ஆளுநர் ஒப்புதலுக்காக முதலமைச்சர் காத்திருந்த போது, தமிழ்நாடு அரசே ஆணை பிறப்பிக்கலாம் என்று ஆலோசனை வழங்கி அதை பிறப்பிக்க வழி வகுத்தது விடுதலை சிறுத்தை கட்சி தான்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி முன் முயற்சியினால் தான் 7.5 விழுக்காடு ஒதுக்கீடு பெறப்பட்டது. 21-01-2021 அன்று அகில இந்திய அளவில் வேளாண் உற்பத்தி பொருள்களின் குறைந்தபட்ச ஆதார விலையை தீர்மானிக்க கூடிய சட்டத்தை இயற்ற மத்திய அரசின் ஒப்புதலை எதிர்பார்த்து காத்திருக்கும் மாநில அரசை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கோரிக்கை விடுப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

பாஜகவின் செயல் திட்டத்தை பாஜக நிர்ணயிப்பதில்லை, ஆர்.எஸ்.எஸ் தான் தீர்மானிக்கிறது. பிரதமர் வேட்பாளர் யார் என்பதை பாஜக முடிவு செய்வதில்லை. ஆர்.எஸ்.எஸ் தான் தீர்மானிக்கிறது. எந்தெந்த கட்சி எந்தெந்த மாநிலத்தில் கூட்டணி அமைக்க வேண்டும் என்பதை பாஜக முடிவு செய்வதில்லை ஆர்எஸ்எஸ் தான் தீர்மானிக்கிறது.

எந்த அரசியல் தலைவரும் எங்கு பேட்டி கொடுத்தாலும் முதலில் திருமாவளவனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என கூறுகிறார்கள். ஏனென்றால் அனைவரையும் கேள்வி கேட்பது விடுதலை சிறுத்தைகள் கட்சிதான். யாரை வேண்டுமானாலும் தன்னுடைய அச்சுறுத்தல் மூலம் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது. ஆனால் எதற்கும் அசராத விடுதலை சிறுத்தைகள் கட்சியை அச்சுறுத்த முடியாது.

'விடுதலை சிறுத்தைகளை யாராலும் அச்சுறுத்த முடியாது'

இந்தியாவில் விலை பேசமுடியாத இயக்கமாக இருக்கிறது விடுதலை சிறுத்தை இயக்கம். எப்படியாவது தலித்துகளை தன்வசப்படுத்தி விட வேண்டுமென பாஜக முயல்கிறது. தேர்தல் நேரங்களில் சமூக வலைதளங்களில் பல வதந்திகளை பரப்பி வருகின்றனர். விடுதலை சிறுத்தை கட்சிக்கும், திமுகவுக்கும் உடைசல் இருப்பதுபோல வதந்திகளை பரப்ப தொடங்கிவிட்டார்கள்” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: தேனியில் கண்ணியம் மறந்த திமுக!

ABOUT THE AUTHOR

...view details