தமிழ்நாடு, புதுச்சேரியில் கடந்த 25ஆம் தேதி நிவர் புயல் தாக்கியது. இந்தhd புயலால் தமிழ்நாட்டில் விழுப்புரம், கடலூர், காஞ்சிபுரம், சென்னை உள்பட மாநிலத்தின் பல பகுதிகளில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன. விழுப்புரம் மாவட்டத்தில் மரக்காணம், கண்டமங்கலம், வானூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல், கரும்பு, வாழை, மணிலா, பப்பாளி, மரவள்ளி உள்ளிட்ட பயிர்கள் நீரில் மூழ்கின.
இந்நிலையில் நிவர் புயலால் தமிழ்நாடு, புதுச்சேரியில் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய குழுவினர் இன்று (டிச. 07) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்துவருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் களிஞ்சிக்குப்பம் பகுதியில் பயிரிடப்பட்டு, நிவர் புயலால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை மத்திய உள் துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் அஷ்டோஷ் அக்னிஹோத்ரி தலைமையிலான 4 பேர் கொண்ட குழுவினர் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தனர்.