தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விழுப்புரம் சிறுமி பாலியல் தொல்லை வழக்கில் புதிய திருப்பம்! - விழுப்புரம் செய்திகள்

விக்கிரவாண்டி அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக தனிப்படை போலீசார் சென்னையில் ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோப்புப்படம்
கோப்புப்படம்

By

Published : Mar 6, 2023, 4:22 PM IST

விழுப்புரம்:விக்கிரவாண்டி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது பள்ளி மாணவி ஒருவர் தனது ஆண் நண்பருடன் கடந்த மாதம் 25-ஆம் தேதி ஏரிக்கரை ஒன்றில் நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த சிலர், ஆண் நண்பரை தாக்கிவிட்டு பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததோடு அவரிடம் இருந்து செல்போன் மற்றும் வெள்ளி நகைகள் திருடப்பட்டதாக கூறப்பட்டது.

இவ்விவகாரம் தொடர்பாக எட்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்ட போலீசார் 13 பேரை பிடித்து விசாரணை நடத்தியபோதும், போதிய துப்பு கிடைக்காததால் போலீசார் இவ்விவகாரத்தை மெத்தனமாக கையாலுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனால் விசாரணையை துரிதப்படுத்திய போலீசார் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு அருகில் கிடைக்கப்பெற்ற செல்போன் சிக்னலை வைத்து விசாரணை நடத்தினர். அதன் அடிப்படையில் மூங்கில்பட்டை சேர்ந்த பூவரசன் என்பவரை சென்னையில் வைத்து நபர் ஒருவரை கைது செய்த போலீசார் அவரை விழுப்புரம் அழைத்து வந்து விசாரணை நடத்த உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ராஜஸ்தானில் தமிழ்நாடு போலீசார் 12 பேர் கைது.. நடந்தது என்ன?

ABOUT THE AUTHOR

...view details