விழுப்புரம் மண்டல அளவிலான காவல் துறை அதிகாரிகளுக்கான ஆய்வுக் கூட்டம், விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்குப் பின், டிஜிபி சைலேந்திரபாபு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அப்போது , “மனநலம் மற்றும் உடல் நலத்தை பேணிக் காக்கும் வகையில், காவல் துறையினருக்கு வாரத்திற்கு ஒருநாள் விடுமுறை அளித்து, அரசு செயல்படுத்தி வருகிறது.
முதல்வரின் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாடு அளவில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் சிறப்பான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கஞ்சா, புகையிலை விற்பனை செய்பவர்களை தீவிரமாக கண்காணித்து, அவர்களை கைது செய்யும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.
காவல் துறையினருக்கு சான்றிதழ் வழங்கிய டிஜிபி மணல் கடத்தலில் ஈடுபடுபவர்கள் ரகசியமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். ரவுடிகளை ஒடுக்கும் வகையில் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுமட்டுமின்றி, முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி, பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு விரைவாக தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
செய்தியாளர்களைச் சந்தித்த டிஜிபி தமிழ்நாடு முழுவதும் காவல் நிலையங்களில் தேங்கிக்கிடக்கும் வாகனங்களை ஏலம்விட்டு, அரசுக்கு வருவாயை ஏற்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது” என தெரிவித்தார். முன்னதாக, விழுப்புரம் காவல் சரகத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையினருக்கு சான்றிதழ்களை டிஜிபி சைலேந்திரபாபு வழங்கினார்.
இதையும் படிங்க:'பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டம் பாயும்' - விருதுநகர் எஸ்பி மனோகர் எச்சரிக்கை