தேசிய பெண் குழந்தைகள் தினம் ஆண்டுதோறும் ஜனவரி 24ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி விழுப்புரம் மாவட்ட சமூக பாதுகாப்புத் துறை சார்பில் பெண் குழந்தைகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக தேசிய பெண் குழந்தைகள் தின விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கிய இந்த பேரணியை ஆட்சியர் ஆ. அண்ணாதுரை கொடியசைத்து தொடங்கிவைத்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கிய இந்த பேரணி விழுப்புரம் நான்குமுனை சந்திப்பு வரை சென்று முடிவடைந்தது.
தேசிய பெண் குழந்தைகள் தின விழிப்புணர்வு பேரணி - National girl child day
விழுப்புரம்: தேசிய பெண் குழந்தைகள் தினத்தையொட்டி நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
National girl child day, தேசிய பெண் குழந்தைகள் தின விழிப்புணர்வு பேரணி
பேரணியில் அரசு கலைக் கல்லூரியைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்துகொண்டனர். அவர்கள் பெண்குழந்தைகளின் கல்வி, பாதுகாப்பு, பெண்ணுரிமை மற்றும் பெண் குழந்தைகளை காப்போம்; பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி கோஷமிட்டபடி சென்றனர்.
இதையும் படிங்க: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு - திடுக்கிடும் தகவல்கள், 3 பேர் கைது!
TAGGED:
National girl child day