நாமக்கல் மாவட்டம் புதன் சந்தை அருகே செல்லப்பம்பட்டியில் உள்ள ஸ்ரீ ஓங்காளியம்மன் கோயில் குடமுழுக்குப் பணிகள் நடைபெற்றுவந்த நிலையில், இன்று கோயில் குடமுழுக்கு நடைபெற்றது. நேற்று (மார்ச் 17) கோமாதா பூஜையுடன் தொடங்கிய விழா, காவிரி ஆற்றிலிருந்து புனித நீர் கொண்டு வரப்பட்டு, முதல் கால யாக பூஜை நடைபெற்றது.
ஸ்ரீ ஓங்காளியம்மன் கோயில் குடமுழுக்கு: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் - Sri SriOngalayamman Temple
நாமக்கல்: செல்லப்பம்பட்டியில் புகழ்பெற்ற ஸ்ரீ ஓங்காளியம்மன் கோயில் குடமுழுக்கு இன்று வெகு விமரிசியாக நடைபெற்றது. இதில் சுற்று வட்டாரப் பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
அதனைத்தொடர்ந்து இன்று அதிகாலை இரண்டாம் கால பூஜைகள் கணபதி பூஜையுடன் தொடங்கப்பட்டு, பூர்ணாஹதியுடன் நிறைவுபெற்றது. அதையடுத்து யாகத்திலிருந்த புனித நீரானது வேத மந்திரம் முழங்க கோயில் வளாகத்தை சுற்றி வந்துஸ்ரீ ஓங்காளியம்மன் கோபுர கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு புனிதநீர் தெளிக்கப்பட்டதையடுத்து, பக்தர்களுக்கு புனிதநீர் தெளிக்கப்பட்டது.
பின்னர், ஸ்ரீ ஓங்காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று மகாதீபாராதனை நடைபெற்றது. இந்தக் குடமுழுக்கு விழாவில் சுற்று வட்டாரப் பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு ஸ்ரீ ஓங்காளியம்மனை தரிசித்து அருள்பெற்றனர்.