விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகின்ற 21ஆம் தேதி நடைபெறவுள்ளது. திமுக சார்பில் புகழேந்தி, அதிமுக சார்பில் முத்தமிழ்ச்செல்வன், நாம் தமிழர் கட்சி சார்பில் கந்தசாமி, இயக்குனர் கௌதமன் உள்ளிட்ட 13 பேர் வேட்பாளர்களாக களம் இறங்கியுள்ளனர். வேட்பாளர்களை ஆதரித்து அனைத்து கட்சிகளைச் சேர்ந்த முன்னணி நிர்வாகிகள் தொகுதியில் தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பு! - விக்கிரவாண்டி இடைத்தேர்தல்
விழுப்புரம்: விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கந்தசாமி தனது ஆதரவாளர்களுடன் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

campaign
நாம் தமிழர் வேட்பாளர் பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பு!
அதேபோன்று நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் கந்தசாமி தனது ஆதரவாளர்களுடன் திருவாமாத்தூர், சோழகணூர், எடப்பாளையம் உள்ளிட்ட பகுதியில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது அவர்கள், 'படித்த இளைஞர்களாகிய எங்களுக்கு ஒரு முறை வாய்ப்பு தாருங்கள். உங்களுக்காக உழைக்க நாங்கள் காத்திருக்கிறோம். ஒருமுறை மாற்றத்தை கொடுங்கள்' என்று கேட்டவாறு வாக்கு சேகரித்தனர்.
இதையும் படிங்க: 'ஜக்கம்மா சொல்றா.... ஜக்கம்மா சொல்றா...!' - பகுத்தறிவுக் கட்சியின் பலே பரப்புரை