விழுப்புரம்: கொல்லியங்குணத்தில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள், முன்னோடிகள் சந்திப்பு ஆலோசனைக் கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பங்கேற்றார். “தமிழ்நாட்டில் குடிசைகள் அதிகம் உள்ள மாவட்டம் விழுப்புரம். கல்வி வளர்ச்சியில் கடைசி 2 இடங்களில் உள்ள மாவட்டங்களில் விழுப்புரம் ஒன்று. போதிய சுகாதார வசதிகள் இல்லை.
ஆனால், டாஸ்மாக் விற்பனையில் தமிழ்நாட்டில் விழுப்புரம் முதல் இடத்தில் உள்ளது. இந்த நிலைத்தொடர்ந்தால், இந்த மாவட்டம் வளர்ச்சி பெற நீண்டகாலம் ஆகும். எனவே, முதலமைச்சர் விழுப்புரம் மாவட்டத்தின் மீது சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இது பாமக நிறுவனர் ராமதாஸ் பிறந்த மாவட்டம். திண்டிவனத்தில் மகளிர் கல்லூரி அமைக்க வேண்டும் என்பது நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது.
மயிலம் தொகுதியில் பேரூராட்சிகள் இல்லை. அங்கு கிராம ஊராட்சிகள்தான் உள்ளன. எனவே மயிலம் - விக்கிரவாண்டி இடைப்பட்ட பகுதியில் அரசுக் கல்லூரி அமைக்க வேண்டும்.