தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உளுந்தூர்பேட்டையில் ஆயிரக்கணக்கான மாதுபாட்டில்கள் பறிமுதல்! - ullundurpettai

விழுப்புரம்: மூன்று நாட்கள் டாஸ்மாக்கு கடைகள் மூடப்படும் நிலையில் காவல்துறையினர் நேற்று உளுந்தூர்பேட்டையில் ஆயிரக்கணக்கான மதுபாட்டில்களை கடத்த முயன்ற நபர்களை கைது செய்தனர்.

உளுந்தூர்பேட்டையில் ஆயிரக்கணக்கான மாதுபாட்டில்கள் பறிமுதல்!

By

Published : Apr 16, 2019, 11:38 AM IST

மக்களவைத் தேர்தல் 18ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இன்றுடன் பரப்புரைகள் நிறைவடைகின்றன. இந்நிலையில் 16 17 18 ஆகிய தேதிகளில் மதுக்கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுகொண்டிருந்த காவல்துறையினர், அரசு மதுபானக் கடையில் மதுபாட்டில்களை வாங்கி சாக்கு மூட்டையில் வைத்துக்கொண்டிருந்தவர்களை விசாரித்தனர்.

உளுந்தூர்பேட்டையில் ஆயிரக்கணக்கான மதுபாட்டில்கள் பறிமுதல்
உளுந்தூர்பேட்டையில் ஆயிரக்கணக்கான மதுபாட்டில்கள் பறிமுதல்

அப்போது அவர்கள் மதுபாட்டில்களை கடத்த முயன்றது தெரியவந்தது. இதையடுத்து அந்த நபர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைப்பற்றப்பட்ட பாட்டில்களின் எண்ணிக்கை ஆயிரத்துக்கும் மேல் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு மதுபான கடைகளுக்கு விடுமுறை என்பதால் இந்த பாட்டில்கள் கள்ளசந்தையில் விற்பதற்காக வாங்கப்பட்டவையா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்றுவருகிறது.

ABOUT THE AUTHOR

...view details