விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகேு உள்ள சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபால். இவரது மகள் ஜெயஶ்ரீ (15). அதே பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துவந்தார்.
இந்நிலையில், வீட்டில் தனியாக இருந்த ஜெயஶ்ரீயை அதே பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர்களான முருகன், கலியபெருமாள் ஆகியோர் இணைந்து பெட்ரோல் ஊற்றி எரித்தனர். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயஶ்ரீ இன்று சிகிச்சைப் பலனின்றி உயிரழந்தார்.
தமிழ்நாட்டையே உலுக்கியுள்ள இந்த சம்பவம் குறித்து மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் "சிறுமி பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கை விரைவு நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும். இதுபோன்ற செயலில் ஈடுபடுவோரை பயங்கரவாதிகளாக கருதி, நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இதேபோல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: அதிமுக பிரமுகர் வெறிச்செயல்: எரித்துக் கொல்லப்பட்ட சிறுமியின் கலங்கவைக்கும் வாக்குமூலம்!