விழுப்புரம்:கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி விழுப்புரம் மக்களவை உறுப்பினர் ரவிக்குமார், ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பினார். அக்கடிதத்தில், செங்கல்பட்டில் உள்ள ஹெச்.எல்.எல் பயோடெக் லிமிடெட் என்ற தடுப்பூசி தயாரிக்கும் பொதுத்துறை நிறுவனத்தில் கரோனா தடுப்பூசி தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
தடுப்பூசி உற்பத்தி குறித்த ரவிக்குமார் எம்பி கடிதத்துக்கு ஒன்றிய அமைச்சர் பதில்! - ரவிக்குமார் எம்பி
செங்கல்பட்டு ஹெச்.எல்.எல் வளாகத்தில் தடுப்பூசி தயாரிப்பது குறித்து பரிசீலித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என ஒன்றிய அமைச்சர் ஹர்ஸ்வர்தன் விழுப்புரம் மக்களவை உறுப்பினருக்கு எழுதிய பதில் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
mp ravikumar gets reply from health minister
அக்கடிதத்திற்கு தற்போது பதில் அளித்துள்ள ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், “ஹெச்.எல்.எல் பயோடெக் லிமிடெட் வளாகத்தில் கரோனா தடுப்பூசி தயாரிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற தங்களுடைய கடிதம் கிடைக்கப் பெற்றேன். இது தொடர்பாக பரிசீலித்து விரைவில் முடிவெடுக்கப்படும் ” என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: 'சமத்துவமே பௌத்தத்தின் இறுதி இலக்கு' - திருமாவளவன்