தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீதித்துறையில் இட ஒதுக்கீடு கொண்டு வர வேண்டும்: எம்.பி., ரவிக்குமார் கோரிக்கை - Viluppuram district news

விழுப்புரம்: மறைந்த மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வானுக்கு அஞ்சலி செலுத்த மத்திய அரசு விரும்பினால் நீதிபதி பதவிகளில் இட ஒதுக்கீட்டை கொண்டு வர வேண்டும் என விழுப்புரம் எம்.பி., ரவிக்குமார் கோரிக்கை வைத்துள்ளார்.

நீதிபதி பதவிகளில் இட ஒதுக்கீட்டைக் கொண்டுவர வேண்டும்
நீதிபதி பதவிகளில் இட ஒதுக்கீட்டைக் கொண்டுவர வேண்டும்

By

Published : Oct 9, 2020, 6:03 PM IST

மத்திய நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சராக இருந்த ராம் விலாஸ் பஸ்வான் திடீர் உடல் நலக்குறைவால் நேற்று (அக்.8) காலமானார். இதையடுத்து அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ராம் விலாஸ் பஸ்வான் மறைவு குறித்து காணொலி மூலம் விழுப்புரம் எம்.பி., ரவிக்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அதில், "பிற்படுத்தப்பட்டோரின் இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக பட்டியலின மக்களைத் திரட்டியவர். காங்கிரஸ் கட்சியால் கிடப்பில்போடப்பட்ட எல்.இளையபெருமாள் கமிட்டியின் பரிந்துரை அடிப்படையில், வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் உருவாகக் காரணமாக இருந்தவர்.

நீதிபதி பதவிகளில் இட ஒதுக்கீட்டை கொண்டு வர வேண்டும்

தேர்தல் அரசியலில் "கின்னஸ் சாதனை" படைத்தவர். எந்தவொரு குற்றச்சாட்டுக்கும் ஆளாகாமல் கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேல் அமைச்சராக இருந்தவர்.

மத்தியில் உள்ள பாஜக அரசு அவருக்கு மரியாதை செலுத்த வேண்டுமென உண்மையாகவே விரும்பினால், ‘நீதித்துறையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், நீதிபதி நியமனங்களுக்கென நேஷனல் ஜூடிசியல் சர்வீஸ்( NJS) என்ற அமைப்பை உருவாக்க வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: ராம் விலாஸ் பஸ்வான் மறைவு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பேரிழப்பு - ஜி.கே. வாசன்

ABOUT THE AUTHOR

...view details