தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மருத்துவமனையில் குழந்தையை விட்டுச் சென்ற கல்நெஞ்ச தாய்! - mother left baby in government hospital

விழுப்புரம் அரசு மருத்துவமனையில் குழந்தையை தவிக்கவிட்டு சென்ற கல்நெஞ்சம் படைத்த தாயை காவலர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மருத்துவமனையில் குழந்தை
மருத்துவமனையில் குழந்தை

By

Published : Aug 6, 2020, 9:07 AM IST

விழுப்புரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் நேற்றிரவு(ஆக.6) நீண்ட நேரமாக குழந்தையின் அழுகுரல் கேட்டது.

இதையடுத்து, மருந்துமனையிலிருந்த நோயாளிகள், உறவினர்கள் சத்தம் கேட்ட இடத்திற்குச் சென்று பார்த்தனர்.

அப்போது, துணியால் சுற்றப்பட்ட நிலையில் ஆண் குழந்தை ஒன்று தரையில் கிடந்துள்ளது. சந்தேகமடைந்த அவர்கள் மருத்துமனை நிர்வாகத்திடம் தெரிவித்தனர்.

அதையடுத்து நிர்வாகத்தினர் அருகிலுள்ள காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அந்தத் தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்த காவல்துறையினர் குழந்தையை கைப்பற்றி மருத்துவர்களின் கண்காணிப்பில் வைத்துள்ளனர்.

மேலும் குழந்தையின் தாய், தந்தை குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

இதையும் படிங்க:குப்பை தொட்டியில் கண்டெடுக்கப்பட்ட குழந்தை - பெயர் சூட்டி வாழ்த்திய அமைச்சர் விஜயபாஸ்கர்

ABOUT THE AUTHOR

...view details