விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகிலுள்ள நரசிங்கனூர் கிராமத்தில் கள் இறக்க அனுமதி கேட்டு, கள் இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தலைமையில் கள் இறக்கி விற்பனை செய்யும் போராட்டம் நடைபெற்றது. அரசின் தடையை மீறி இந்த கள் இறக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் காவல்துறைக்கும் இடையே சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் பெண்கள் உட்பட 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
கள் இறக்கும் போராட்டம்: விழுப்புரத்தில் பெண்கள் உட்பட 300க்கும் மேற்பட்டோர் கைது! - toddy Nallasamy
விழுப்புரம் அருகே பனந்தோப்பில் கள் இறக்கி போராட்டம் நடத்திய கள் இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி உள்பட 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
![கள் இறக்கும் போராட்டம்: விழுப்புரத்தில் பெண்கள் உட்பட 300க்கும் மேற்பட்டோர் கைது! viluppuram toddy protest](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-10527544-thumbnail-3x2-toddy.jpg)
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கள் இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி, "அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டே போராட்டம் நடத்தியதாகவும், ஆனால் காவல்துறையினர் தங்களை கைது செய்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், தமிழ்நாடு அரசு கள் இறக்க உடனடியாக அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், கள் இறக்க அனுமதி வழங்கவில்லையென்றால், அதன் தாக்கம் தேர்தலில் எதிரொலிக்கும் என்றும் கள் இறக்கும் போராட்டம் மார்ச் மாதம் வரை தமிழ்நாடு முழுவதும் தொடரும்" என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க:'கள் இறக்க விதிக்கப்பட்டத் தடையை அரசு விலக்க வேண்டும்' - நல்லுசாமி