தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விழுப்புரம் மீன்பிடி திருவிழாவில் மீன்களை அள்ளிச்சென்ற கிராம மக்கள்! - விழுப்புரத்தில் ஊரடங்கு மீறல்

விழுப்புரம்: நத்தமேடு மீன்பிடி திருவிழாவில் 10க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கலந்துகொண்டு மீன்களை அள்ளிச்சென்றனர்.

-nathamedu-fishing-festival-in-villupuram
-nathamedu-fishing-festival-in-villupuram

By

Published : Aug 6, 2020, 2:27 PM IST

விழுப்புரம் மாவட்டம் நத்தமேடு கிராமத்தில் ஆண்டுதோறும் ஆடி மாதம் மீன்பிடி திருவிழா நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இந்தாண்டு மீன்பிடி திருவிழா இன்று (ஆக.6) காலை நடைபெற்றது. அதில் நத்தமேடு, சிறுவாக்கூர், கல்பட்டு, மாம்பழப்பட்டு, ஒட்டன் காடுவெட்டி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை 100க்கும் மேற்பட்டவர் கலந்துகொண்டனர்.

நத்தமேடு மீன்பிடி திருவிழா

அதில் கெண்டை, கெளுத்தி, கொரவை, விரால் உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்களை மக்கள் பிடித்துச் சென்றனர்.

கரோனா ஊரடங்கு அமலிலுள்ள நிலையில் 100க்கும் மேற்பட்டவர்கள் தகுந்த இடைவெளியின்றி இப்படி மீன்பிடி திருவிழாவில் கலந்துகொண்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:அரியலூரில் மீன்பிடி திருவிழா-நூற்றுக்கானோர் திரண்டதால் பரபரப்பு...!

ABOUT THE AUTHOR

...view details