நிவர், புரெவி புயல்களால் பெயத கனமழை காரணமாக கடலூர் மாவட்டம், நெய்வேலி என்எல்சியில் மழை நீர் சூழ்ந்துள்ளது. இங்கிருந்து வெளியேற்றப்படும் தண்ணீரானது பரவனாறு வழியாக கடலுக்குச் சென்றடையும்.
அப்படி, தண்ணீர் செல்லும் பொழுது பரவைனாலாற்றிலிருந்து உடைப்பு ஏற்பட்டு ஆடூர் அகரம், கல்குணம் உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் மழைநீர் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
நிவாரணம் வழங்கும் மு.க.ஸ்டாலின் இதனால், ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட சம்பா நெல் சாகுபடி தண்ணீரில் மூழ்கியுள்ளன. இந்நிலையில், இன்று (டிச.05) கடலூரில் நிவர் புயல் பாதிப்பு குறித்த ஆய்வு செய்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்து விவசாயிகள், பொதுமக்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கினார்.
இதையும் படிங்க:கள்ளத்தனமாக மதுபானம் விற்ற பெண்கள் கைது!