இதுதொடர்பாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சமூக, பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள சிறுபான்மையினர் தங்கள் பொருளாதாரத்தை மேம்படுத்திக்கொள்ளும் வகையில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் குறைந்த வட்டியில் தனிநபர் கடன், சிறு தொழில் கடன் மற்றும் சுய உதவிக் குழுக்களுக்கான சிறுகடன் போன்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டத்தின்கீழ் தொழில் தொடங்கவும், வியாபாரம் செய்யவும் ஏற்கெனவே செய்துவரும் தொழிலை அபிவிருத்தி செய்து கொள்ளவும் விரும்புபவர்கள் கடன் உதவி பெற விண்ணப்பித்துக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
சுய உதவிக் குழுக்களுக்கான கடன்பெற குழுவின் 60 விழுக்காடு சிறுபான்மை இனத்தவரும், 40 விழுக்காடு பிற இனத்தவரும் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் 18 வயதுக்கு மேற்பட்டவராகவும், 55 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் 98 ஆயிரமும், நகர்ப்புறங்களில் வசிப்பவர்கள் ஒருலட்சத்து இருபதாயிரம் இருத்தல் வேண்டும்.