விழுப்புரம் மாவட்டத்திலிருந்து தனியாக பிரிக்கப்பட்டு தமிழ்நாட்டின் 33ஆவது மாவட்டமாக கள்ளக்குறிச்சி செயல்படும் என்று கடந்த ஜனவரி 8ஆம் தேதி சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதனைத் தொடர்ந்து மாவட்ட தொடக்க விழா வருகின்ற 26ஆம் தேதி நடைபெற உள்ளது.
இவ்விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்க உள்ளார். இதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்படுகின்றன.