தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முதலமைச்சர் வருகை: முன்னேற்பாடுகளை ஆய்வு செய்த அமைச்சர் - CM palanisamy

விழுப்புரம்: முதலமைச்சர் பழனிசாமி வருகையையொட்டி நடைபெற்று வரும் முன்னேற்பாடுகளை அமைச்சர் சி.வி.சண்முகம் ஆய்வு செய்தார்.

Minister who visited the preparations for the arrival of the Chief Minister
Minister who visited the preparations for the arrival of the Chief Minister

By

Published : Sep 3, 2020, 6:59 PM IST

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களில் கரோனா ஆய்வுக் கூட்டங்களை நடத்தி வருகிறார். மேலும் அச்சமயத்தில் பல்வேறு நலத்திட்ட பணிகளுக்கும் அடிக்கல் நாட்டி வருகிறார். அந்த வகையில், விழுப்புரம் மாவட்டத்துக்கு வருகிற 9ஆம் தேதி முதலமைச்சர் பழனிசாமி வருகை தர உள்ளார்.

இதற்காக பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த பணியை அமைச்சர் சி.வி.சண்முகம், ஆட்சியர் ஆ. அண்ணாதுரை, அதிமுக எம்எல்ஏக்கள் முத்தமிழ்செல்வன், சக்கரபாணி உள்ளிட்டோர் இன்று (செப்டம்பர் 3) நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details