விழுப்புரம்: செஞ்சி அருகே மணலப்பாடி மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வடிவழகன். இவருக்கும், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த துளசி என்பவருக்கும் 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்து இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.
இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால், கணவன் வீட்டில் இல்லாத நேரத்தில் தனது இளைய மகன் பிரதீப்பை அடிக்கடி கடுமையாக தாக்கி அதை வீடியோவாகப் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவைக் கண்டு அதிர்ச்சியடைந்த வடிவழகன், துளசி மீது சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
புகாரையடுத்த துளசி மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜகுமாரி தலைமையிலான தனிப்படையினர், துளசியை கைது செய்து, சிறையில் அடைத்துள்ளனர்.