தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பள்ளி மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கிய அமைச்சர் சி.வி.சண்முகம்! - அமைச்சர் சி.வி.சண்முகம்

விழுப்புரம்: செஞ்சி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட அரசு பள்ளிகளில் பயிலும் பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு அரசின் விலையில்லா மதிவண்டிகளை அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்.

பள்ளி மாணவர்களுக்கு மதிவண்டிகள் வழங்கிய அமைச்சர் சி.வி.சண்முகம்
பள்ளி மாணவர்களுக்கு மதிவண்டிகள் வழங்கிய அமைச்சர் சி.வி.சண்முகம்

By

Published : Dec 30, 2020, 10:27 PM IST

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ராஜா தேசிங்கு பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவை சட்டத்துறை அமைச்சர் சிவி.சண்முகம் தொடங்கிவைத்து மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.

இதேபோல், நல்லான்பிள்ளைபெற்றாள், சத்தியமங்கலம், ஆலம்பூண்டி, நெகனூர், மழவந்தாங்கள் உள்ளிட்ட 11 பள்ளிகளில் பயிலும் ஆயிரத்து 729 மாணவ மாணவிகளுக்கு 68 லட்சத்து 30 ஆயிரத்து 379 ரூபாய் மதிப்பீட்டில் மிதிவண்டிகள் வழங்கபட்டது.

இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுறை, மாவட்ட கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா, செஞ்சி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் மஸ்தான் ஆகியோர் உடனிருந்தனர்.

இதேபோல், பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் உள்ள 4,632 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சட்டப்பேரவை உறுப்பினர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.

இதையும் படிங்க: அனைத்து கூட்டணி கட்சித் தலைவர்களுடன் பிரமாண்ட பொதுக்கூட்டம் - ஜெயக்குமார்

ABOUT THE AUTHOR

...view details