விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திமுக நகர செயல் வீரர்கள் கூட்டம் நேற்று (டிச.15) நடைபெற்றது. இதில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் செஞ்சி மஸ்தான், “திண்டிவனத்தில் கவுன்சிலர் தேர்தலில் சில நிர்ப்பந்தத்தின் காரணமாக கூட்டணி கட்சிக்கு சீட்டுகள் தந்தோம்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்தான் நிரந்தர முதலமைச்சர். அவர்தான் இறுதி மூச்சு வரைக்கும் முதலமைச்சராக இருப்பார். ஐந்தாம் தலைமுறையை நாம் உருவாக்கி விட்டோம். எதிர்காலத்தில் தமிழர்களுடைய முகவரியாகத் திகழக் கூடியவர், உதயநிதி ஸ்டாலின். சிறந்த முறையில் திராவிட மாடலுக்கு ஐந்தாம் தலைமுறையாகப் பொறுப்பேற்று இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.