விழுப்புரம்:செஞ்சிக் கோட்டையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் 8 நாட்கள் நடைபெற உள்ள மரபு நடை விழா நேற்று( ஜன.7) தொடங்கியது. இந்த விழா மாவட்ட ஆட்சியர் மோகன் தலைமையில் நடைபெற்றுவருகிறது. இந்த விழாவை முன்னிட்டு ஜனவரி 7ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை இலவசமாக கோட்டையை பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் செஞ்சி மஸ்தான் சிலம்பம்பாட்டமாடி அசத்தினார். இந்த விழா மேடையில் பேசிய அமைச்சர் செஞ்சி மஸ்தான், ‘விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி கோட்டையின் வரலாற்றை கூறும் மரபு நடை விழா சிறப்பாக கொண்டாப்பட இருக்கிறது. இந்த நிகழ்வின் மூலமாக செஞ்சி கோட்டையின் வரலாறும் ஆட்சிபுரிந்த மன்னர் ராஜா தேசிங்கு உள்ளிட்டவர்களின் வாழ்க்கை வரலாற்றை அனைவரும் அறிந்து கொள்ள முடியும்.