விழுப்புரம் மாவட்டத்துக்குட்பட்ட மின் நுகர்வோரின், மின் தடை குறித்த குறைகளை உடனுக்குடன் சரி செய்யும் வகையில் ரூ.18.78 லட்சம் செலவில் விழுப்புரம் தலைமை மின்பொறியாளர் அலுவலகத்தில் மின்தடை புகார் பதிவு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் புகார் பதிவு மையத்தினை சட்டத் துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தொடங்கிவைத்தார்.
உங்க ஏரியாவுல கரண்ட் இல்லையா? இந்த நம்பருக்கு ஃபோன் பண்ணுங்க! - minister-programe-vilupuram
விழுப்புரம்: மின்தடை குறித்த புகார்களை தெரிவிக்க 24 மணி நேரமும் இயங்கும் புகார் பதிவு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் விழுப்புரம் மாவட்டத்துக்குட்பட்ட பொதுமக்கள் தங்களுடைய மின்தடை குறித்த புகார்களை '1912' அல்லது '18004255419' என்ற இலவச அழைப்பு தொலைபேசி எண்களை 24 மணிநேரமும் தொடர்பு கொண்டு, தங்களது மின்தடை குறித்த புகார்களை பதிவு செய்தால் மின்தடை நிவர்த்தி செய்யப்படும்.
இத்திட்டத்தின் வாயிலாக மாவட்டத்திலுள்ள ஆறு லட்சத்து 97 ஆயிரத்து 530 மின்நுகர்வோர்கள் பயன்பெறுவார்கள். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன், மின் துறை அலுவலர்கள், ஊழியர்கள் கலந்துகொண்டனர்.