விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் ஊராட்சி அளவிலான 10 குழு கூட்டமைப்புகளுக்கு பெருங்கடன் நலத்திட்ட உதவிக்கான ரூ. 197.95 லட்சம் மதிப்பீட்டிலான காசோலையையும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பொதுநிதி திட்டத்தின் கீழ் செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகளுக்கு தலா ரூ. 4,920 மதிப்பீட்டில் 15 மாற்றுத்திறனாளிகளுக்கு மொத்தம் ரூ. 78 ஆயிரத்து 800 மதிப்பீட்டில் நவீன காதொலி கருவிகளையும்,
நந்தன் கால்வாய் திட்டத்துக்கு நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு அமைச்சர் பாராட்டு...! - விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
விழுப்புரம்: நந்தன் கால்வாய் புனரமைப்பு திட்டத்துக்கு தாமாக முன்வந்து நிலங்களை ஒப்படைத்த விவசாயிகளை அமைச்சர் சி.வி.சண்முகம் நேரில் அழைத்து பாராட்டினார்.
முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து பல்வேறு விபத்துகளில் உயிரிழந்த நான்கு குடும்ப வாரிசுதாரர்களுக்கு ரூ. 7 லட்சத்துக்கான காசோலையையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் பயனாளி ஒருவருக்கு ரூ. 4,120 மதிப்பீட்டில் இலவச தையல் இயந்திரம் என மொத்தம் ரூ. 2 கோடியே 58 லட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சி.வி.சண்முகம் இன்று (நவம்பர் 20) பயனாளிகளுக்கு வழங்கினார்.
முன்னதாக, வருவாய் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் நந்தன் கால்வாய் புனரமைப்பு திட்டத்துக்கு செஞ்சி வட்டம் துத்திப்பட்டு, சித்தரசூர் ஆகிய கிராமத்தில் 1.35 ஏக்கர் நிலத்தை 19 விவசாயிகள் தாமாக முன்வந்து அமைச்சர் சி.வி.சண்முகத்திடம் வழங்கினர். அவர்களை அமைச்சர் சி.வி.சண்முகம் பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.