விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கல்லூரியில் ரூ.50 லட்சம் மதிப்பில் மூன்று கூடுதல் வகுப்பறை கட்டடங்களை உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி திறந்து வைத்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "‘அடுப்பு ஊதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு’ என்று சொல்லிக் கொண்டிருந்த காலத்தை மாற்றிய அண்ணாவின் வழியில் ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் தமிழ்நாடு முதலமைச்சருக்கு எனது நன்றிகள்.
இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது - அமைச்சர் பொன்முடி - Villupuram Member of Parliament Mr Ravikumar
விழுப்புரத்தில் கல்வி வளர்ச்சி திட்டத்தின் கீழ் கூடுதல் வகுப்பறை கட்டடங்களை அமைச்சர் பொன்முடி திறந்து வைத்தார்.
பெண் கல்விக்கு முக்கியத்துவம் தருகின்ற அடிப்படையிலும், பெண்கல்வியை ஊக்குவிக்கும் வகையிலும் அறிமுகப்படுத்தியுள்ள புதுமை பெண் திட்டத்திற்காக அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவிலேயே தமிழ்நாட்டின்தான் புதுமைப் பெண் திட்டம் என்ற ஒரு சிறப்பான திட்டத்தை கொண்டுவரப்பட்டது. நம்முடைய முதலமைச்சரின் தொலைநோக்கு பார்வையால் மாணவர்கள் பலர் தனியார் கல்லூரிகளை விட அரசு கல்லூரிகளில் சேர ஆர்வம் காட்டுகின்றனர் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: "தரமான கல்வியை தராமல் போனதே திராவிட மாடல்" - அன்புமணி ராமதாஸ்