தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விழுப்புரம் இப்ராஹிம் படுகொலை; குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கிய அமைச்சர் பொன்முடி! - minister ponmudi

மது போதையில் இரண்டு சகோதர்களால் கத்தி குத்துப்பட்டு இறந்த பல்பொருள் அங்காடி ஊழியர் இப்ராஹிம் ராஜா குடும்பத்திற்கு முதலமைச்சர் நிவாரண நிதியான ரூபாய் 2 லட்சத்திற்கான காசோலையை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இப்ராஹிம் தாயாரிடம் வழங்கினார்.

Etv Bharat நிவாரண நிதியை நேரில் வழங்கிய அமைச்சர் பொன்முடி
Etv Bharat நிவாரண நிதியை நேரில் வழங்கிய அமைச்சர் பொன்முடி

By

Published : Apr 7, 2023, 4:52 PM IST

குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கிய அமைச்சர் பொன்முடி!

விழுப்புரம்: விழுப்புரம் நகர்எம்ஜி ரோடு மார்க்கெட் பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் கடந்த 29ஆம் தேதி மாலை மது போதையில் இரண்டு சகோதரர்கள் ஒரு பெண்ணை தாக்க முற்பட்டனர். அப்போது, அங்கு கடையிலிருந்த இப்ராஹிம் ராஜா என்பவர் இச்சம்பம் குறித்துத் தட்டிக் கேட்டுள்ளார்.

இதனால் கோபமடைந்த சகோதரர்கள் இருவரும் அவரை கத்தியால் குத்தி படுகொலை செய்தனர். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து உயிரிழந்த இப்ராஹிம் ராஜாவின் குடும்பத்திற்கு அரசு சார்பில் இழப்பீடு தொகையைத் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து ரூபாய் 2 லட்சம் வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து இன்று ( ஏப்.07 ) காலை விழுப்புரம் வடக்கு தெருவில் உள்ள இப்ராஹிம் இல்லத்திற்குச் சென்ற உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி. இப்ராஹீம்-ன் தாயார் மெகரணிசாவிடம் ரூபாய் 2 லட்சத்திற்கான காசோலை மற்றும் நகர திமுக சார்பில் ஒரு லட்சம் ரூபாய் நிதியும் வழங்கினார். உடன் திமுக விழுப்புரம் மாவட்ட செயலாளர் மற்றும் விக்கிரவாண்டி சட்டப்பேரவை உறுப்பினருமான புகழேந்தி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி, நகர மன்ற தலைவர் சர்க்கரை உள்ளிட்ட பலர் இருந்தனர்.

இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, “முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து இரண்டு லட்சம் ரூபாய் நிதி அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் நேரில் சென்று கொடுக்க உத்தரவிட்டதின் பேரில் இன்று காலை நேரில் வந்து அவரது தாயாரிடம் காசோலையை வழங்கியுள்ளோம்.

நகர திமுக சார்பில் ஒரு லட்சம் ரூபாய் நதியையும் வழங்கியுள்ளோம். மேலும், முதலமைச்சர் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொண்டோம். கொலை சம்பவத்தில் ஈடுபட்ட ராஜசேகர் மற்றும் வல்லரசு ஆகிய இரண்டு நபர்கள் மீது குண்டூர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் மூலம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது” என தெரிவித்தார்.

இதையும் படிங்க:சென்னையில் டெலிவரி ஊழியர் பாலியல் சீண்டல் என புகார்.. போலீசார் அதிரடி நடவடிக்கை.. இளைஞரின் விளக்கம் என்ன?

ABOUT THE AUTHOR

...view details