தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: பொன்முடிக்கு சவால்விடும் அமைச்சர்! - latest election news

விழுப்புரம்: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக நிச்சயம் வெற்றிபெறும் என்று அமைச்சர் கே. பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் பாண்டியராஜன்

By

Published : Oct 5, 2019, 12:13 PM IST

Updated : Oct 5, 2019, 12:26 PM IST

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகிற 21ஆம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலில் அதிமுக சார்பில் முத்தமிழ்செல்வனும், திமுக சார்பில் புகழேந்தியும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.

விக்கிரவாண்டிஅதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வனை ஆதரித்து தம்பிதுரை, அமைச்சர்கள் செங்கோட்டையன், எஸ்.பி வேலுமணி, கே.பி. அன்பழகன், எம்.சி. சம்பத், கே. பாண்டியராஜன் உள்ளிட்ட அதிமுக முக்கிய பிரமுகர்கள் தொகுதி முழுவதும் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.

அமைச்சர் கே. பாண்டியராஜன் நேற்று கஞ்சனூர் அருகே உள்ள வேம்பி கிராமத்தில் முத்தமிழ்ச்செல்வனுக்கு ஆதரவாகத் திண்ணை பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், "இந்த தேர்தல் மிக முக்கியமான தேர்தல். கட்சியையும், ஆட்சியையும் வலுப்படுத்த இந்த தேர்தலில் நாம் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்" என்றார்.

அமைச்சர் கே. பாண்டியராஜன்

பரப்புரையின் இறுதியில் பொதுமக்கள் வேண்டுகோளுக்கிணங்க 'ஒன்றே குலம் என்று பாடுவோம்' என்ற பாடலை பாடினார். இதில் தேமுதிக, பாமக, பாஜக தொண்டர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கே. பாண்டியராஜன், “விக்கிரவாண்டி தொகுதியில் வேம்பி, பூண்டி உள்ளிட்ட கிராமங்களில், அனைத்து தோழமை கட்சிகளுடன் பரப்புரையை தொடங்கியுள்ளோம். நல்ல முறையில் செயல்பட்டு 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றி பெறுவோம்.

எத்தனை அமைச்சர்கள் வந்தாலும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றிபெற முடியாது என்று கூறிய திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு நாங்கள் சவால் விடுகிறோம். இந்த இடைத்தேர்தலில் இதுவரை திமுக தலைவர்கள் பிரசாரத்திற்கு வரவில்லை. எங்களுடைய பணியைப் பார்த்தவர்களுக்கு தெரியும் வெற்றி பெறப்போவது யார் என்று? அவசியம் இந்த தேர்தலில் நாங்கள் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம். தமிழ்நாடு முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் பரப்புரைக்கு வரும்போது எங்களுடைய எழுச்சி பொன்முடிக்கு தெரியும்” என்றார்.

Last Updated : Oct 5, 2019, 12:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details