விழுப்புரம் :கரோனா தொற்று பாதிப்பால் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்ட முதலியார் குப்பத்தில் அமைந்துள்ள இலங்கை அகதிகள் முகாமில் அமைச்சர் கே. எஸ் மஸ்தான் ஆய்வு மேற்கொண்டார்.
மரக்காணம் அடுத்த முதலியார் குப்பத்தில் அமைந்துள்ள இலங்கை அகதிகள் முகாமில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் உள்ள காரணத்தினால், அது தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று (மே.28) மரக்காணம் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தமிழ்நாடு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் கே. எஸ் மஸ்தான் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து இலங்கை அகதிகள் முகாமில் மேற்கொள்ளப்பட்டுள்ள கட்டுப்பாடு நடவடிக்கைகள், தடைசெய்யப்பட்ட பகுதியில் உள்ளவர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் சரியாக வழங்கப்படுகிறதா என அவர்களது அடிப்படைத் தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.