விழுப்புரம்:2021 - 2022ஆம் ஆண்டின் சட்டமன்ற அறிவிப்பு எண்.27 மற்றும் 28-ன் படி, இந்து சமய அறநிலையத்துறையின் ஆளுகையிலுள்ள கிராமப்புற திருக்கோயில்கள் திருப்பணி திட்டம் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வாழும் பகுதியிலுள்ள திருக்கோயில்கள் திருப்பணி திட்டம் ஆகியவற்றின் கீழ், திருக்கோயில் ஒன்றுக்கு ரூ.2 லட்சம் வீதம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நிதியுதவி வழங்கும் விழா இன்று (ஜன.5) மாலை நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நிதி பெறுவதற்காக விழுப்புரத்தை சுற்றியுள்ள சிறிய கோயில் நிர்வாகிகள், இன்று மாலை நடைபெற உள்ள முதலமைச்சர் நிகழ்ச்சியில் ரூ.2 லட்சம் பெற உள்ளனர். இதற்காக விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் இரண்டு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டு, அவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டன.
இதனை வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செஞ்சி மஸ்தான், "பெரியவர்களாக இருந்தாலும், சிறியவர்களாக இருந்தாலும், அனைவரையும் நாகரிகத்தோடு வரவேற்கின்ற பண்பினை அண்ணா, பெரியார், கருணாநிதி மற்றும் ஸ்டாலின் ஆகியோர் எங்களுக்கு கற்றுக் கொடுத்துள்ளனர். அவர்களை நாங்கள் பின்பற்றி வருகிறோம்.