வங்கக் கடலில் உருவான நிவர் புயல், நேற்று (நவம்பர் 25) கரையை கடக்கும்போது இரவு முழுவதும் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக, கடலூரில் பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வெளியே வர முடியாமல் வீடுகளுக்குள்ளேயே பொதுமக்கள் முடங்கிக் கிடக்கின்றனர்.
புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு வழங்கும் அமைச்சர் - அமைச்சர் எம்.சி. சம்பத்
விழுப்புரம்: மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு அமைச்சர் எம்.சி. சம்பத் தனது சொந்த செலவில் மூன்று வேளையும் உணவு வழங்கி வருகிறார்.
![புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு வழங்கும் அமைச்சர் providing-food](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-9674361-thumbnail-3x2-minister.jpg)
providing-food
providing-food
இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு, தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் தனது சொந்த செலவில் இன்று (நவம்பர் 26) காலை முதல் உணவு வழங்கி வருகிறார். இது குறித்து பேசிய அமைச்சர், புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மூன்று வேளையும் உணவு வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.