விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட விக்கிரவாண்டி, வி.சாலை, ரெட்டிகுப்பம், அய்யூர் அகரம் உள்ளிட்ட 33 ஊராட்சி பகுதிகளில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான குடிநீர், மின்விளக்கு, சாலை, வடிகால் வசதி உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு அமைச்சர் சி.வி.சண்முகம் இன்று அடிக்கல் நாட்டினார்.
‘என் காரை மறித்து கேள்வி கேட்கலாம்!’ - மூதாட்டிக்கு அமைச்சர் உத்திரவாதம்! - Villupuram
விழுப்புரம்: விக்கிரவாண்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.60 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளுக்கு அமைச்சர் சி.வி.சண்முகம் இன்று அடிக்கல் நாட்டினார்.
பின்னர் வி. சாலை பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், 'அதிமுக ஆட்சியில் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் சிறப்பான முறையில் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இந்தாண்டு விழுப்புரம் மாவட்டத்தில் போதுமான அளவு மழை இல்லை. இருப்பினும் வறட்சி நிலவரங்களை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று கண்டறிந்து குடிநீர் பிரச்னை ஏற்படாதவாறு சிறப்பான முறையில் பணியாற்றினார்' என்றார்.
இதற்கிடையே வி.சாலை பகுதியில் நடைபெறவுள்ள பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய அமைச்சரிடம் மூதாட்டி ஒருவர் தனது வீட்டுக்கு கழிவறை வசதி வேண்டுமென முறையிட்டார்.