விழுப்புரம் மாவட்டத்தில் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் கீழ் குடிபெயர்ந்து மீண்டும் சொந்த ஊர் திரும்பிய திறன் பெற்ற இளைஞர்களுக்கு தொழில் தொடங்குவதற்கு தலா 1 லட்சம் ரூபாய் வீதம் 70 பயனாளிகளுக்கு 70 லட்சம் ரூபாய் மதிப்பிலான காசோலையை அமைச்சர் சி.வி. சண்முகம் வழங்கினார்.
இதனைத்தொடர்ந்து சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பல்வேறு விபத்துகளில் உயிரிழந்த 6 நபர்களின் குடும்ப வாரிசுதாரர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 14 லட்சம் ரூபாய் மதிப்பிலான காசோலைகளையும் வழங்கினார்.
மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் சமையலர் பணிக்கான பணி நியமன ஆணையும் வழங்கப்பட்டது.