தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

”அரசுப் பள்ளி மாணவர்களின் நீட் தேர்ச்சி விகிதம் உயர்வு வரவேற்ககூடியது” - சி.வி.சண்முகம் - அமைச்சர் சண்முகம்

விழுப்புரம் : நீட் தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளது வரவேற்கக்கூடிய ஒன்று என தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.

அமைச்சர் சண்முகம் செய்தியாளர் சந்திப்பு
அமைச்சர் சண்முகம் செய்தியாளர் சந்திப்பு

By

Published : Oct 17, 2020, 12:03 PM IST

அதிமுகவின் 49ஆவது ஆண்டு தொடக்க விழா இன்று (அக்.17) கொண்டாடப்படுவதையொட்டி விழுப்புரம் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு அமைச்சர் சி.வி.சண்முகம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளது வரவேற்கக் கூடிய ஒன்று. இதனை மேலும் அதிகப்படுத்துவதற்காக தான் மருத்துவ இளநிலைப் படிப்புகளுக்கான சேர்க்கையில், 7.5 சதவிகிதம் அரசுப் பள்ளிகள் மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதனை ஆளுநர் நிலுவையில் வைத்துள்ளார். இதற்கு விரைவில் அவர் ஒப்புதல் அளிப்பார் என எதிர்பார்க்கிறோம்" என்றார்.

அமைச்சர் சண்முகம் செய்தியாளர் சந்திப்பு

இதற்கிடையில் திமுக எம்.பி.கௌதம சிகாமணியின் ரூ.8 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது குறித்த கேள்விக்கு., 'இவர்கள் தான் ஊழலை ஒழிக்க வந்தவர்கள்' என விமர்சித்தார்.

இதையும் படிங்க...ஆடு மேய்க்கும் தொழிலாளி மகன் நீட் தேர்வில் இந்திய அளவில் முதலிடம் பிடித்து சாதனை

ABOUT THE AUTHOR

...view details