விழுப்புரம்:மரக்காணம், வானூர் பகுதிகளில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகப் புறம்போக்கு நிலத்தில் வசிப்பவர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சட்டத் துறை அமைச்சர் சி.வி. சண்முகத்துடன் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரும், துணை ஆட்சியரும் கலந்துகொண்டனர். திண்டிவனம், மரக்காணம், வானூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 1,206 பயனாளர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் பேசிய அமைச்சர், “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மக்களுக்குச் சிறப்பான திட்டங்களை வழங்குவோம் என்று கூறிவரும் எதிர்க்கட்சியினர், பொய் வாக்குறுதிகளைக் கூறி மக்களை ஏமாற்றிவருகின்றனர். அவர்கள் ஆட்சியில் இருக்கும்போது என்ன செய்தார்கள்” என்று கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், "சிலர் விவசாயிகளை ஏமாற்றி ஆட்சியைப் பிடிக்க நினைக்கிறார்கள். ஆனால் நமது முதலமைச்சர் உண்மையிலேயே ஒரு விவசாயி. மாதத்திற்கு ஒருமுறை அவரது சொந்த ஊருக்குச் சென்று வேளாண் பணிகளைப் பார்த்துவருகிறார்.
அமைச்சர் சி.வி. சண்முகம் பேச்சு அதனால்தான் விவசாயிகளுக்கு ஏற்ற திட்டங்களான பயிர்க்கடன் தள்ளுபடி, மும்முனை மின்சாரம் வழங்கும் திட்டங்களை அறிமுகப்படுத்தினார்" என்று கூறினார்.