மரக்காணம் வட்டம் மண்டவாய் புதுகுப்பம் கிராமத்தில், 97 பயனாளிகளுக்கு ரூ.18.42 லட்சம் மதிப்பிலான மீனவர் விவசாய கடன் அட்டையினை சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் இன்று வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், " அறிக்கையிலேயே அரசியல் செய்து கொண்டிருக்கிற திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு ஆன்லைன் சூதாட்டத்தை பற்றிப் பேச தார்மீக உரிமை இல்லை.
’ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை கேட்க திமுகவிற்கு தகுதியில்லை’ - சி.வி.சண்முகம்
விழுப்புரம்: லாட்டரி அதிபரோடு கும்மாளம் அடித்த திமுகவினருக்கு ஆன்லைன் சூதாட்டத்தை பற்றி பேச எந்தத் தகுதியும் இல்லை என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.
minister
லாட்டரி அதிபரோடு அமர்ந்து கொண்டு செம்மொழி மாநாட்டை நடத்தியவர்கள் தான் திமுகவினர். எனவே, திமுகவினருக்கு ஆன்லைன் சூதாட்டத்தை பற்றி பேச எந்தத் தகுதியும் இல்லை. ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வது குறித்து பரிசீலித்து வருவதாக நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது “ என்றார்.
இதையும் படிங்க: ”திமுக சொல்லி கேட்க விரும்பாமல் கருத்துக்கேட்பு நாடகம் நடத்தும் அரசு” - ஸ்டாலின் தாக்கு
Last Updated : Nov 5, 2020, 6:16 PM IST