விழுப்புரத்தில் ரூ. 70 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அரசு சட்டக்கல்லூரி மற்றும் டாக்டர் எம்ஜிஆர் அரசு மகளிர் கலைக் கல்லூரிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, கே.பி.அன்பழகன், ஆர்.துரைக்கண்ணு ஆகியோர் இன்று தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், "விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் சட்டக்கல்லூரி அமைத்துக் கொடுத்துள்ள முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். வளர்ச்சியில் பின்தங்கியுள்ள விழுப்புரம், தருமபுரி, ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களில் சட்டக்கல்லூரி அமைக்கப்பட்டுள்ளது.
‘மாணவர்களின் தோழனாக இருங்கள்’ - ஆசிரியர்களுக்கு முதலமைச்சர் அறிவுரை
கடந்த இரண்டு ஆண்டுகளில் ஆறு சட்டக்கல்லூரிகள் தந்த ஒரே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. இதனை மாணவர்கள் பயன்படுத்திக்கொண்டு சிறந்த சட்ட வல்லுநர்களாகவும், சமுதாயத்தில் நல்ல வழக்கறிஞர்களாகவும் வந்து நாட்டுக்கு பெருமை சேர்க்க வேண்டும்.