செஞ்சி ராஜா தேசிங்கு பள்ளியில் தமிழ்நாடு அரசு வழங்கும் விலையில்லா மதிவண்டிகள் வழங்கும் விழா இன்று (டிசம்பர் 30) நடைபெற்றது. அதனைத் தொடக்கிவைத்த சட்டதுறை அமைச்சர் சிவி. சண்முகம், மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.
பின்னர் மாணக்கர்களிடையே பேசிய அமைச்சர், ”தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் மொத்தம் 43 லட்சம் மாணக்கர்கள் படிக்கிறார்கள். இந்த 43 லட்சம் பேர்களில், கடந்த 2 இரண்டு ஆண்டுகளில் நீட் தேர்ச்சி பெற்று மருத்துவ சேர்க்கையில் இடம் பெற்றவர்கள் எண்ணிக்கை வெறும் பத்துதான்.
நீட் வருவதற்கு முன்பு, நீட் வந்ததற்கு பின்பு என்று கணக்கிட்டால் தற்போது தான் அதிகளவில் மாணவர்கள் மருத்துவம் பயில்கிறார்கள். நீட் தேர்வு தொடங்குவதற்கு முன்பு ஆண்டிற்கு அரசுப் பள்ளியில் பயின்ற 30 மாணவர்கள் மருத்துவ கல்வி பெற்றார்கள். நீட் தேர்வு வந்த பின்னர் ஆண்டிற்கு 10 பேர் சேர்ந்தார்கள்.