விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகேயுள்ள சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபால். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவருக்கும் முன் விரோதம் இருந்துவந்தது. இதன் காரணமாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை (மே.10) பத்தாம் வகுப்பு படிக்கும் ஜெயபாலின் மகள் ஜெயஸ்ரீயைப் பெட்ரோல் ஊற்றி இருவர் எரித்து கொலை செய்தனர்.
விழுப்புரம் சிறுமி படுகொலை! அரசு சார்பில் ரூ. 5 லட்சம் நிவாரணம்!
12:29 May 12
விழுப்புரம்: திருவெண்ணைநல்லூர் அருகே எரித்துக் கொலை செய்யப்பட்ட ஜெயஸ்ரீயின் குடும்பத்துக்கு தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்ட 5 லட்ச ரூபாய் நிதியினை சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் இன்று வழங்கினார்.
இவ்வழக்கில் தொடர்புடைய முருகன், கலியபெருமாள் ஆகிய இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். மாணவியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு, தமிழ்நாடு அரசு சார்பில் ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என, முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார். இதைத்தொடர்ந்து, இன்று ஜெயஸ்ரீயின் பெற்றோர்களிடம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் ரூ.5 லட்சத்துக்கானக் காசோலையை வழங்கினார்.
மாணவி கொலை வழக்கில் தொடர்புடைய இருவரும் அதிமுக பிரமுகர் என்பதும், அவர்கள் இருவரையும் அதிமுக கட்சித் தலைமை அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து நீக்கியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க...சிறுமி ஜெயஸ்ரீ எரித்து கொலை: அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம்!