தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஸ்டாலினை முதலமைச்சராக்க கருணாநிதிக்கு விருப்பமில்லை: அமைச்சர் சி.வி.சண்முகம் - pmk

விழுப்புரம்: மு.க.ஸ்டாலினை முதலமைச்சராக்க கருணாநிதிக்கு விருப்பமில்லை என தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.

mugam

By

Published : Mar 24, 2019, 11:55 AM IST

விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் வடிவேல் ராவணனை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், “அதிமுக பல தேர்தல்களை சந்தித்துள்ளது. ஆனால், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நடைபெறுகிற முதல் தேர்தல் இதுவாகும். அதனால் இந்தத் தேர்தல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. பல்வேறு சூழ்ச்சிகளுக்கு மத்தியில் ஜெயலலிதாவின் ஆசியோடு இந்த ஆட்சி சிறப்பாக நடைபெற்றுவருகிறது.

இந்தக் கூட்டணி வெற்றி கூட்டணி. திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை முதலமைச்சராக்க கருணாநிதிக்கு விருப்பமில்லை. அவர் நினைத்திருந்தால் ஸ்டாலினை திமுக தலைவராகவும், முதலமைச்சராகவும் ஆக்கியிருக்க முடியும். ஆனால் அவர் அதற்கெல்லாம் சரிபட்டு வரமாட்டார். ஸ்டாலினின் முதலமைச்சர் கனவுக்கு சமாதிகட்ட வேண்டும். விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் யார் வெற்றிபெற வேண்டும் என்பதைவிட, யார் வென்றுவிடக்கூடாது என்பதில் நாம் கவனமாக இருக்க வேண்டும்” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details