தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 9, 2020, 3:00 PM IST

ETV Bharat / state

'திண்டுக்கல் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் அரசு நிச்சயம் மேல்முறையீடு செய்யும்' - சி.வி. சண்முகம்

விழுப்புரம்: திண்டுக்கல் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில், அரசு நிச்சயம் மேல்முறையீடு செய்யும் என சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார்.

dindigul child sexual harassment case appel
'திண்டுக்கல் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் அரசு நிச்சயம் மேல்முறையீடு செய்யும்' அமைச்சர் சி.வி. சண்முகம்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்துள்ள வல்லம் பகுதியில் நடைபெற்ற அதிமுக உறுப்பினர் சேர்க்கை முகாமில் சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் பங்கேற்றார்.

'ஸ்டாலினுக்கு நாட்டில் என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை'- அமைச்சர் சி.வி. சண்முகம்

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், " எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அடுத்த முதலமைச்சர் என கனவு கொண்டிருக்கிறார். ஆனால், அதற்கான எந்த தகுதியையும் அவர் வளர்த்துக்கொள்ளவில்லை. 2013ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் பெண்கள் மீது இழைக்கப்படும் குற்ற வழக்குகளை விசாரிக்க மாவட்ட நீதிபதி தலைமையில் சிறப்பு நீதிமன்றம் செயல்பட்டுவருகிறது.

தமிழ்நாட்டில் 32 பெண் சிறப்பு நீதிமன்றங்கள் செயல்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில், அதுகுறித்து எதுவும் தெரியாமல் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கான சிறப்பு நீதிமன்றம் திறப்போம் என்று பேசுவது அவருக்கு நாட்டில் என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை என்பதைக் காட்டுகிறது” என்றார்.

இதையும் படிங்க:சாதி சான்றிதழ் கிடைக்காததால் மாணவி தற்கொலை முயற்சி!

ABOUT THE AUTHOR

...view details