விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் ரூ.1.98 கோடி மதிப்பில் புவியியல் மற்றும் சுரங்கத்துறை இணை இயக்குநர் அலுவலகத்துக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று (ஆகஸ்ட் 21) நடைபெற்றது. இதில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் கலந்துகொண்டு புதிய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், "தமிழ்நாட்டில் நீதிமன்றம் திறப்பது குறித்து நீதிமன்ற குழுவே முடிவு செய்யும். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்ளும் கூட்டத்தில் திமுக எம்.பி, எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டு பொய்யானது" என்றார்.