கள்ளக்குறிச்சி மாவட்டம் நீலமங்கலம் கூட்டுரோட்டில், கடந்த மாதம் SSB மைக்ரோ ஃபினான்ஸ் எனும் பெயரில் போலி நிதி நிறுவனம் ஒன்றை அருள் என்பவர் தொடங்கினார். அந்த நிறுவனத்திற்கு தமிழ்நாடு முழுவதும் கிளைகள் உள்ளதாகவும், தான் அதில் கிளை மேலாளராக உள்ளதாகவும் கூறியுள்ளார்.
பொதுமக்கள் காவல் நிலையத்தில் புகார் தங்கள் நிறுவனத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் தனி நபர் கடன் என ரூ. 50ஆயிரம் முதல் ரூ. 15 லட்சம் வரை கடன் வழங்க உள்ளதாகக் கூறி, அதற்கான 10-க்கும் மேற்பட்ட பணியாளர்களையும் நியமித்து சுற்றியுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் துண்டு பிரசுரங்களை வழங்கி விளம்பரப்படுத்தியுள்ளார்.
கடன் பெறுபவர்கள் மகளிர் சுய உதவிக்குழுவில் உள்ள பெண்கள் ஒவ்வொருவரும் தலா ரூ. 1500 கட்டினால் கடன் வழங்கப்படும் எனக் கூறியுள்ளார். அதில், தனிநபர் கடனுக்கு 1 லட்ச ரூபாய்க்கு ஆறாயிரம் வீதம் கடன் தொகைக்கு ஏற்ப 30 ஆயிரம் ரூபாய் வரையிலும் என ஏறக்குறைய 2500-க்கும் மேற்பட்ட நபர்களிடம் ரூ. 3 கோடிக்கு மேல் அருள் வசூல் செய்துள்ளார்.
அதையடுத்து ஒரு மாதம் முடிவடைவதற்குள் திடீரென நிறுவனத்தை மூடிவிட்டு அவர் தலைமறைவாகிவிட்டார். இதனால் பாதிப்பிற்குள்ளானவர்கள் சுமார் 500-க்கும் மேற்பட்டவர்கள் கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதையும் படிங்க: சென்னையில் குடியரசுத் தலைவர், ஆளுநர் பெயரை பயன்படுத்தி மோசடி' - இளைஞர் கைது!