விழுப்புரம்:செஞ்சி அடுத்த மேல்மலையானூர் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயம் 2000 ஆண்டுகள் பழமையான பிரசித்தி பெற்ற திருத்தலமாகும். இத்திருத்தலத்தில் மாதந்தோறும் அமாவாசை தினத்தில் நள்ளிரவில் ஊஞ்சல் உற்சவம் நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில் தை மாத அமாவாசையை முன்னிட்டு மூலவர் அம்மனுக்கு பால், தயிர், நெய், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து உற்சவர் அங்காளம்மன் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.