விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் பிரசித்திப் பெற்ற திருத்தலமான அருள்மிகு அங்காளபரமேஸ்வரி ஆலயம் திகழ்கிறது. தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, புதுச்சேரி போன்ற மாநிலங்களிலிருந்து பக்தர்கள் வந்து வழிபட்டுச் செல்வது வழக்கம்.
கரோனா ஊரடங்கு காலத்திலும் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகளை மாதந்தோறும் அலுவலர்கள், அறங்காவலர்கள் முன்னிலையில் உண்டியல் பிரித்து எண்ணுவது வழக்கம். இன்று திறக்கப்பட்ட உண்டியல் எண்ணும் பணி கோயில் வளாகத்தில் அலுவலர்கள், அறங்காவலர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோயில் உண்டியல் திறப்பு இம்மாத உண்டியலில் கிடைத்த ரொக்கப்பணம் 29 லட்சத்து 81 ஆயிரத்து 359 ரூபாய் ஆகும். மேலும் தங்கம் 116 கிராம், வெள்ளி 425 கிராம் ஆகியவை காணிக்கையாக பக்தர்கள் உண்டியலில் செலுத்தியிருந்தனர். உண்டியல் திறப்பின்போது திருக்கோயில் உதவி ஆணையர் ராமு, திருவண்ணாமலை உதவி ஆணையர் அ. ஜான்சிராணி, அறங்காவலர்கள் ம. சரவணன் உள்ளிட்ட அறங்காவாலர்களும் கலந்துகொண்டனர்.
உண்டியல் எண்ணிக்கை காணொலி பதிவுசெய்யப்பட்டது. பாதுகாப்புப் பணியில் வளத்தி காவல் நிலைய காவல் துறையினர் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இது கரோனா ஊரடங்கு தளர்வுக்குப் பின்பு பக்தர்களின் காணிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் அடுத்த 10 நாள்களில் 2,000 மினி கிளினிக்குகள் திறப்பு - முதலமைச்சர்