விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகேயுள்ள மீனம்பூர் கிராமத்தைச் சேர்ந்த ஆரிஃப்கான் மகன் முஜிபூர் (22). இவர், சென்னையில் பணிபுரிந்துவந்தார். இவருக்கு கடந்த வாரம் திடீரென காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து சொந்த ஊர் திரும்பிய இவர், செஞ்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதற்கட்ட சிகிச்சைக்காகவும், புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காகவும் அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து சிகிச்சைப் பெற்றுவந்த இளைஞர் நேற்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். வைரஸ் காய்ச்சலுக்கு இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம், கொரோனா பாதிப்பால் ஏற்பட்டிருக்குமோ என்று செஞ்சியில் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
செய்தியாளர்களைச் சந்தித்த மருத்துவக்கல்லூரி முதல்வர் குந்தவி தேவி இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் குந்தவி தேவி கூறுகையில், "விழுப்புரம் மாவட்டத்தில் கொரானாவால் யாரும் இதுவரை பாதிக்கப்படவில்லை. யாராவது பாதிக்கப்பட்டால் அவர்களுக்குத் தேவையான மருத்துவ உபகரணங்களும் போதிய அளவில் உள்ளது. மருத்துவ சிகிச்சை அளிக்க தயாராக உள்ளோம்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கொரோனா எதிரொலி - மதுரை விமான நிலையத்தில் ஆலோசனை