தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆட்டோ ரேஸ் நடத்திய மெக்கானிக்குகள் - போலீஸ் தீவிர விசாரணை - ஆட்டோ ரேஸ்

விழுப்புரத்தில் தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் நடத்தப்பட்ட ஆட்டோ ரேஸ் வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகிய நிலையில் ரேஸில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

ஆட்டோ ரேஸ் நடத்திய மெக்கானிக்குகள்
ஆட்டோ ரேஸ் நடத்திய மெக்கானிக்குகள்

By

Published : May 13, 2022, 5:30 PM IST

விழுப்புரம்:தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் ஆட்டோ ரேஸ் நடைபெற்றுள்ளது, இதன் வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது. இதனைக் கண்ட காவல் துறையினர், சட்டவிரோதமாக ரேஸ் நடத்தியவர்கள் குறித்து விசாரணை நடத்தினர்.

முதற்கட்ட விசாரணையில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மெக்கானிக் ஒருவரும், சென்னை வியாசர்பாடி மற்றும் சிந்தாதிரிப்பேட்டை பகுதிகளைச் சேர்ந்த நான்கு ஆட்டோ மெக்கானிக்களும் இணைந்து இப்போட்டியை நடத்தியுள்ளது தெரியவந்துள்ளது.

ஆட்டோ ரேஸ் நடத்திய மெக்கானிக்குகள்

மேலும், யார் சிறந்த ஆட்டோ மெக்கானிக் என்பதை நிரூபிக்கும் வகையில் இப்போட்டி நடத்தப்பட்டதாகவும் முதல் பரிசாக 10ஆயிரம் ரூபாய் பந்தயத் தொகையாக வழங்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் ஜானகிபுரம் முதல் மடப்பட்டு வரை 18 கிலோ மீட்டர் தூரம் இந்த ஆட்டோ ரேஸ் பந்தயம் நடத்தப்பட்டதாக தெரிகிறது.

தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், ஆட்டோ ரேஸில் ஈடுபட்ட மெக்கானிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:காதலன் கொலை - காதலி தற்கொலை முயற்சி

ABOUT THE AUTHOR

...view details