விழுப்புரம்:மரக்காணம் மீனவர்கள் கடலில் தங்கி மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது மீனவர்கள் தங்களது செல்போனில் மேகங்கள் கடல் நீரை உறிஞ்சும் அரிய காட்சியைப் படம் பிடித்து வெளியிட்டுள்ளதாகத் தமிழ் முன்னணி செய்தி நிறுவனங்கள் சில செய்தி வெளியிட்டன.
அந்த வீடியோவின் உண்மைத் தன்மை குறித்து ஈடிவி பாரத் தமிழ்நாடு குழு(Fact Check) ஆய்வு செய்தது. ரிவர்ஸ் இமேஜ் சர்ச்சின் போது இந்த புகைப்படம் மற்றும் வீடியோ மரக்காணத்தில் எடுக்கப்பட்டது அல்ல என்பதும் அது பழைய வீடியோ மற்றும் புகைப்படம் என்பதும் தெரியவந்துள்ளது.
மேகங்கள் நீரை உறிஞ்சுவது போன்ற இந்த நிகழ்வை வானிலை ஆய்வாளர்கள் சுழல் காற்று என்றும் ஆங்கிலத்தில் டோர்னடோ(Tornado) என்று அழைக்கின்றனர். குறிப்பிடப்பட்டுள்ள இந்த சம்பவம் தொடர்பாக அடிக்கடி போலி செய்திகளும் பரவிய வண்ணம் உள்ளது. 2017 மற்றும் 2019-ம் ஆண்டு இதேபோன்று வீடியோ பரவியது.